நானும் கட்சி தொடங்கிறேன்டா
டேய் பேரப் பசங்களா, இங்க வாங்கடா.
@@@@@@
என்னங்க தாத்தா?
@@@@
நான் யாருடா?
@@#@#
தாத்தா, நீங்க பழம்பெரும் நடிகர்.
#@@@@@@
இப்ப நடிகர்கள் சிலர் என்ன செய்யறாங்க?
##########
ஆளுக்கொரு அரசியல் கட்சி தொடங்கறாங்க.
@@@@@@@
நான் பிரபல பழம்பெரும் நடிகரா இருந்து இன்னும் அரசியல் கட்சி தொடங்காம இருக்கிறது வெட்கமா இருக்குதடா பேரப்பசங்களா.
#########
தாத்தா, இன்னிக்கு ரோம்ப நல்ல நாள். இன்னிக்கே கட்சியைத் தொடங்குங்க தாத்தா.
#########
என்னோட கட்சிக்குப் பேரு?
########
நீங்க நடிச்சீங்க. பணம் சம்பாதிச்சீங்க. பல தொழில்கள்ல உங்க பணத்தை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் முதலீடு செஞ்சீங்க. நம்ம மாநில மக்களுக்கு எதுவுமே இதுவரை செஞ்சதில்லை. இருந்தாலும் நாம கட்சிக்கு வைக்கிற பேரு நாம அறிவிக்கிற வாக்குறுதி, பொதுக்கூட்டத்தில பேசற பொய் இதை வச்சுத்தான் மக்கள் நமக்கு வாக்கு அளிப்பாங்க. பொய் பேசித்தான் மக்களின் நம்பிக்தையைப் பெறமுடியும்.
@@@@@@@
சரி கட்சிப் பேரைச் சொல்லுங்கடா.
@@@@@@@
'மக்கள் தொண்டுக் கட்சி (MTK)
#########
அருமையான பேருடா.
@@@@@@@@
தாத்தா இன்னிக்கு அஞ்சு மணிக்கு நிருபர்கள் வருவாங்க. நிருபர் கூட்டத்தில கட்சிப் பேரு கொள்கை பற்றி தெரிவியுங்கள். "தமிழக மக்களுக்காக நான் என் உயிரைக் கொடுக்கவும் தயார்"ன்னு அறிவிச்சுடுங்க. எந்த கட்சியிலயும் சேரத் தகுதி இலல்லாதவர்கள் எல்லாம் நம்ம கட்சியில சேர கூட்டம் கூட்டமாக வருவாங்க. நீங்க பழம்பெரும் நடிகர என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் மக்கள் நம்ம ம.தொ.க கட்சில சேருவாங்க.
#########
சரி. சரி.
@@@@@
நாளைய நிருபர் கூட்டத்தில் "மக்கள் தொண்டுக் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இணையவழியாகச் சேர்ந்திருக்கிறார்கள்" என்று அறிவித்துவிடுங்கள்.
########
சரிடா பேரப்பசங்களா.