ஆமாம் - நான் விசிலடிக்கிறவன் தான்

ஊர் சபை கூடியிருக்கிறது..
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
தலைவர்: ஏன்டா சுரேசு, நீ காளியண்ணன் பொண்ணைப் பாத்து விசிலடிச்சு கண்சாடை காட்டியதா உன் மேல குற்றச்சாட்டு. நீ என்னடா சொல்லற?
*****************
அய்யா, நான் வெறித்தனமான சினிமா ரசிகன். இந்த மாவட்டத்தில என் அபிமான நடிகர் மன்றத்தின் தலைவர். தியேட்டர்ல விசிலடிக்கிறவன் தான் உண்மையான ரசிகன். சினிமாவில கதாநாயகன், சிரிப்பு நடிகன், பெண் கதாப்பாத்திரங்கள் முதல் வேலைக்காரன் வரை அழகான பொண்ணுங்க/ஆண்களைப் பாத்தா விசிலடிக்கிறாங்க. நான் நீங்க சொல்லறப் பொண்ணைப் பாத்து விசிலடிச்சு கண்ணடிச்சது உண்மைதான். அதிலென்ன தப்பு? அந்தப் பொண்ணு பக்கத்திலகூட நான் போகல.
**********
டேய் சுரேசு உன்னைப் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்தா கொறஞ்சது ஆறு மாசம் உள்ள தள்ளிடுவாங்க. அது தெரியுமா?
***************
நான் எல்லாம் எங்க தலைவர் படங்களப் பாத்து சட்டத்தைதக் கரைச்சு குடிச்சவன். நான் சபையிலேயே நிக்கிறேன். காவல் ஆய்வாளருக்கு தகவல் குடுங்க. ஆனா நீங்க குடுக்கமாட்டீங்க. நம்ம மாவட்டத்தில நான் விஐபி. எங்க தலைவரின் மக்கள் தொண்டு அமைப்பின் தலைவர். அடையாள அட்டையைப் பாருங்க. அடுத்த சட்டமன்ற உறுப்பினர் நாந்தான். கண்டிப்பா ஜெயிப்பேன். நம்ம ஊருக்கு எதையும் செய்யமாட்டேன். என்ன சொல்லறீங்க?
**************
இத்துடன் ஊர் சபை கலைகிறது. எல்லாம் அவரவர் வீட்டுக்குப் போங்க.

எழுதியவர் : மலர் (17-Dec-20, 10:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 184

மேலே