மருத்துவ வெண்பா – இரசத்தாளி வாழைப்பழம் - பாடல் 89
நேரிசை வெண்பா
தின்னச் சுவைகொடுக்குந் தீபனத்தை மாற்றிவிடும்
எந்நாளும் வாதமது ஏறிநிற்கும் – இந்நாட்டில்
கண்டரசத் தாளிக் கனியால் உறுங்குணத்தைத்
தண்டார் குழலணங்கே சாற்று!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
இரசத்தாளி வாழைப்பழம் தின்ன நாவிற்கிதமாக இருக்கும். அக்கினி மந்தத்தை உண்டாக்கும். வாத நோயை உபரியாக்கும்.