மருத்துவ வெண்பா – மொந்தன் வாழைப்பழம் - பாடல் 92

நேரிசை வெண்பா

மந்தமுட னோய்கனத்தல் வாத வலிசீதந்
தொந்தமுறு தாகமிவை தோன்றுங்காண் – புந்திவலி
யோட்டுபித்தங் காமாலை யுள்வறட்சி யுந்தொலையும்
நாட்டுமொந் தன்பழத்தி னால்!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

நாட்டு மொந்தன் பழத்தினால் அக்கினி மந்தம், உடல் வலியுடன் பாரிப்பு, இசிவு, சீதளம், திரிதோட தாகம், இவைகள் உண்டாம். மன உறுதியை விலக்குகின்ற பித்தம், காமிலம், மேதோ தாதுவைப் பற்றிய வறட்சி இவை நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-20, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே