மரியாதை - மரியாதை
வாடா மொட்டை சுரேசு. என்னடா இந்தப் பக்கம்?
########
உங்களை எச்சரிக்க வந்திருக்கிறேன்.
#######
ஏன்டா திருட்டுப் பயலே, காவலர் ஆய்வாளர் என்னையே எச்சரிக்கிறயா? உனக்கு எவ்வளவு கொழுப்பு?
########
ஐயா, ஆய்வாளர் ஐயா..தொலைக்காட்சி செய்திகளிலயும் செய்தித்தாள்களிலும் என்னைந் போன்ற திருடர்கள், ரவுடிகளப் பத்தி செய்தி வெளியிடறபோது மரியாதையான சொற்களைப் பயன்படுத்தறாங்க. "மொட்டை சுரேசு என்பவர் கைது செய்யப்பட்டார். சொட்டை சந்திரன் என்ற ரவுடிக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை. இவர்மீது பல குற்ற வழக்குகள் உள்ளன" இது மாதிரி செய்தியை மரியாதையா வெளியிடறாங்க. இனிமே எங்களை "வாடா போடா, அவனே இவனே, கழுதை, நாய்" -ன்னு அவமரியாதை செய்யாதீங்க. எங்க மேல கைவைக்கிற பழக்கத்தையும் கைவிடுங்க.
########
என்னடா மொட்டை திருட்டு நாயே நீ கெட்டகேடட்டுக்குக் மரியாதை வேணுமா?
#########
ஐயா, எங்களுக்கு ஒரு வழக்குரைஞர் இருக்கிறாரு. அவரு எங்கள் சார்பா மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிப்பார். மானநஷ்ட வழக்கும் போடுவார். நீங்களும் கம்பி என்ன வேண்டும். சாக்கிரதை.
#########
ஏன்டா மொட்டைக் கழுதை, கேடுகெட்ட பொறுக்கி நாயே எனக்கே எச்சரிக்கை குடுக்கிறயா? யோவ் கண்ணையா,-இந்த மொட்டையைப் பிடிச்சு உள்ள தள்ளுயா.
#########
ஐயா, இது கொஞ்சங்கூட சரி இல்லீங்க. பின்விளைவை நீங்க அனூபவிச்சுத்தான் ஆகணும்.
##########
பாக்கிறன்டா போடா. கண்ணையா இவன் மேல பக்கத்துத் தெருவுல நடந்த அந்த கடத்தல் வழக்க இவன் செய்ததா முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யு ஐயா.
@@@@@@@@
??????????