அழகுநிலா - தங்கநிலா

தம்பி, அழகுநிலா எங்கடா?
######
என்ன அண்ணே, அழகுநிலா பகல்ல தெரியாதுன்னு தெரியாத மாதிரி கேக்கறீங்க?
########
சரி தங்கநிலா எங்கடா, தம்பி?
########
'வெள்ளி நிலா'ன்னுதான் கவிஞர்கள் பாடுவார்கள். தங்க நிலா எங்க இருக்குதுன்னு எனக்கு எப்படித் தெரியும்?
#######
அழகுநிலா தங்கநிலா (இ)ரண்டும் ஒண்ணுதான்டா தம்பி
#########
அதெப்படி (இ)ரண்டும் ஒண்ணு ஆகும்?
#########
நீ ஆக்கிட்டயே!
#######
என்ன அண்ணே கொழப்பறீங்க?
$$$####
அழகுநிலா தங்கநிலா (இ)ண்டும் உனக்கு (இ)ரத்த உறவுடா!
#########
நான் மனிதன். நிலா துணைக்கோள். இதுவரைக்கும் புல்பூண்டுகூட நிலாவில இருக்கிறதா தகவல் இல்லை..நிலா மனிதப் பிறவி இல்லை. அப்பறம் எப்பிடி (இ)ரத்த உறவு ஆகும்.
##########
நீயும் நானும் உடன்பிறப்புகள். நமக்குள்ள (இ)ரத்த உறவு இருக்குது. அதே மாதிரி தங்கநிலாவும் அழகுநிலாவும் உனக்கும் எனக்கும் (இ)ரத்த உறவுடா தம்பி.
#######
போங்கண்ணா. எனக்கு ஒண்ணும் புரில. நீங்களே எனக்கு புரிய மாதிரி சொல்லுங்க.
#######
உன் செல்ல மகன் உனக்கு (இ)ரத்த உறவா இல்லையா?
##########
ஆமாம். (இ)ரத்த உறவுதான். அதிலென்ன சந்தேகம்?
########
சரி தெரியாத மாதிரி கேக்கறேன். உன் செல்ல மகன் பேரு என்னடா?
########
ஹேமாசந்திரன்.
##########
அந்தப் பேருக்கு என்னடா அர்த்தம்?
########
அது இந்திப் பேருன்னுதான் தெரியும். அர்த்தமெல்லாம் தெரியாது அண்ணே.
#########
நாஞ் சொல்லறேன் கேட்டுக்கா. 'ஹேமா'-ன்னா (Hema = golden, beautiful) 'தங்க'மான, 'அழகு +ஆன'. 'சந்திரன்'னா (Chandar = moon) நிலா. இப்பப் புரிஞ்சுதா? உம் பையன் பேருக்கு (இ)ரண்டு அர்த்தம்.
##########
புரிஞ்சுது அண்ணே. அந்த சோசியகாரன் பேச்சைக் கேட்டு அந்தப் பேரை எம் பையனுக்கு வச்சுட்டேன். வேற நல்லா பேரை தேர்ந்தெடுத்து பையன் பேரைச் சட்டப்படி மாத்தணும். பெண் கொழந்தையா இருந்தா 'தங்கநிலா, அழகுநிலா' பொருத்தமா இருக்கும்.

எழுதியவர் : மலர். (27-Dec-20, 1:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 151

மேலே