மருத்துவ வெண்பா – மலை வாழைப்பழம் பாடல் 96

நேரிசை வெண்பா

நல்ல மலைவாழை நற்கனியை யுண்டார்க்குச்
சொல்லுமலச் சிக்கலறும் சோபையறும் – பொல்லாத
மந்தமுறுந் தீபனம்போம் வாயினிக்கும் எல்லார்க்குங்
கந்தமலர்ப் பூங்குழலே காண்!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

அதிக மதுரத்தை உடைய நல்ல மலை வாழைப்பழத்தால் மலபந்தமும், சோபை ரோகமும் நீங்கும். ஆனால், இது அக்கினி மந்தத்தை உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-20, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே