மருத்துவ வெண்பா – நவரை வாழைப்பழம் பாடல் 97
நேரிசை வெண்பா
மாந்த மொடுநமைச்சல் வாதகப மும்பெருகும்
பாந்த லுறுகரப்பான் பாவுங்காண் – பூந்தடக்கை
யாழைப் பழித்தமொழி யன்னமே கேள்,நவரை
வாழைப் பழத்தான் மதி!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
நவரை வாழைப் பழத்தினால் மந்தாக்கினி, தினவு, வாத சிலேஷ்ம தொந்தம், கரப்பான் ஆகியவைகள் அதிகரிக்கும்.