மருத்துவ வெண்பா – பேயன் வாழைப்பழம் பாடல் 98
நேரிசை வெண்பா
பேயன் பழமருந்திற் பித்தரோ கம்போகும்
வாயுவுண் டாகும் மலங்கழியும் - தீயே
அகத்தி லதிகுளிர்ச்சி ஆகும் அணங்கே
சகத்தி லிதையறியச் சாற்று!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
பேயன் வாழைப்பழத்தினால் பயித்தியமும், உட்சூடும் நீங்கும். வாதாதிக்கமும், மிகு குளிர்ச்சியும், இலகுவாக மலமிறங்கலும் உண்டாகும்.
இவைகளின்றித் தற்காலத்தில் கொட்டை வாழை, நேந்திரம் வாழை, பூவம் வாழை முதலிய பல இனங்கள் உண்டு.