Who is the hero

Who is the hero?

சில பெயர்களை மேடைகளில் உச்சரிக்க
அலை கடலென ஆர்ப்பரிக்கும்
விண்னை முட்டும் கரகோஷம்
காதை பிளக்கும் சத்தம்
காரணம்?
இக்கால இளைஞர் பட்டாளத்தின்
ஆதர்ஷ நாயகர்கள் பெயர்கள்
எதற்காக இந்த கைதட்டல்
ஏன் இந்த பரவசம்
ஏனோ இந்த புளங்காகிதம்
அந்த பெயர்கள்
நிழல் நாயகர்கள்
அது விஜய்யா, அஜீத்தா...
இன்னும் நிறைய உண்டு
நான் கேட்கிறேன்
அந்த வாலிப கிழவர்கள்
இளைஞர்களே உங்களுக்கு
வாரி கொடுத்தது என்ன?
இந்த வாலிப சேட்டை
யாவும் உங்கள் ஹார்மோன்
ரசாயண மாற்றங்களே
தவிர வேறன்ன?
இந்த நாட்டுகாக பகல், இரவு பாராமல்
கொட்டும் மழை, புயல், கடுங்குளிர்
என்று எதையும் பொருட்படுத்தாமல்
இந்திய எல்லையிலே காவல் காக்கும்
இந்திய இராணுவ வீரர்களே
நிஜ ஹீரோக்கள் .
இவர்களை பாராட்டுங்கள்
இவர்களுக்காக கை தட்டுங்கள்
நான் கேட்கிறேன்
திரையில் உங்கள் பொன்னான
நேரத்தை திருடும் போலி நாயகர்களை
நன்கு அறிந்த நீங்கள்
ஏன் நம் நிஜ, தம் உயரை தினம்,தினம்
நமக்காக பணையம் வைக்கும் இராணுவ
வீரர்களை பற்றி அறிந்திருக்கவில்லை
வருத்தம். மிகவும் வருத்தம்.

ஸ்ரீகாந்த அவர்கள் எழுதிய
" மறத்தல் தகுமோ"
எத்தனை பேர் படித்திருப்பீர்.
இராணுவ வீரர்கள் பற்றிய நூல்.

பாகிஸ்தான் எல்லையில் போர்.
ஏறைகுறைய இரண்டு பக்கமும் சண்டை
புரியும் இடத்தில் அனைவரும் மாண்டு போனார்கள்.
மிச்சம் இருப்பது
பாகிஸ்தான் பக்கம் ஒரு தளபதி.
நம் இந்தியர் பக்கம் ஒரு வீரன்.
இந்த பக்கமும், அந்த பக்கமும் ஒரே நேரத்தில் " டேங்கர் பொத்தான்" இரு நாட்டு வீரர்களால் அழுத்தப்பட்டது.
இந்திய வீரன் இறந்து விட்டார்.
பாகிஸ்தான் வீரர் பிழைத்து கொண்டார்.
போரில் வீரமாக சாகசம் புரிந்து நாட்டுக்காக உயர் நீத்த அந்த இந்திய வீரனின் பெயர் அருண் கேத்ரி பால்.
பாகிஸ்தான் தளபதியின் பெயர்
முகமது கவ்ஜான் நாசர்.

விஜய்யுக்கும், அஜீத்துக்கும் கைதட்டி, விசில் அடிக்கும் இளைஞர் பட்டாளமே, மேலே, இந்திய நாட்டுக்காக உயிர் நீத்த அந்த நிஜ கதாநாயகர்களை எத்தனை பேர் அறிவீர்.

பாகிஸ்தான் தளபதி, முகமது கவ்ஜான் நாசர், இந்திய வீரன் - அருண் கேத்ரி பால்
அப்பாவை எப்படியோ இந்திய இராணுவ
உதவியை நாடி அவர் விலாசம் பெற்று , அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

ஐயா வணக்கம் ,

போரில், இருவரும் ஒரே நேரத்தில் தான் அந்த டேங்கர் பொத்தானை அழுத்தினோம். ஒரு வினாடி உங்கள் பிள்ளை பின் தங்கிவிட்டார். நான் ஒரு வினாடி முந்திகொண்டேன். மற்றபடி உங்கள் பிள்ளை சுத்தமான வீரன்.
விதி எனக்கு வெற்று வாழ்க்கையும்,
உங்கள் மகனுக்கு வீர மரணமும் கொடுதுள்ளது.
நன்றி
முகமது கவ்ஜான் நாசர்.

இளைஞர்களே!

சிவப்பு ரத்தம் பூசிய
கதாநாயகர்கள் நம் இராணுவ வீரர்கள் முக்கியமா? அல்லது
காசுக்காக தினம் சிவப்பு பவுடர் பூசும்
நிழல் கதாநாயகர்கள் முக்கியமா?
யார் நிஜ கதாநாயகர்கள்?
Who is the real hero??
யோசியுங்கள்....

- பாலு.

எழுதியவர் : பாலு (1-Jan-21, 6:25 pm)
சேர்த்தது : balu
பார்வை : 111

மேலே