மரணம் என்னை தேடுகிறது

நான் பெண்ணாக பிறந்தாள்
பிறந்தும் கல்லி பால்
கொடுக்க தவறியாதால்

பருவம் முளைத்த பொழுதில்
சிறகை உடைத்து விட்டார்கள்
கனவுகள் வரும் முன்பே
கண்களைக் கொய்து எடுத்தார்கள்

திருமணம் என்ற பெயரில்
என்னைச் சிறை வைத்தார்
கருணை ஏதும் இன்றி
அவசர முடி வெடுத்தார்

என்னைப் பொதி செய்து
அனுப்பி வைத்தார்
என் ஆசையைக் கேளாமல்
அவர்கள் பாரம் குறைந்தது
என்று என் பாரத்தை கூட்டிவிட்டார்கள்

எழுதியவர் : வினோஜா (4-Jan-21, 3:15 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 136

மேலே