நீநான்நாம்

உன்னோடு பேச வேண்டும்
மணிக்கணக்கில் உன் குரல் கேட்க வேண்டும்
ஒவ்வொரு நொடியும் இனிக்க வேண்டும்
விடியற்காலையில் புல்மேல் உள்ள
பனித்துளி போல் நான் மிதக்க வேண்டும்
காலம் என்ற கள்வனின்
கைபிடியிலிருந்து மீள வேண்டும்
எண்ணிக்கையில்லா எண்ணங்களோடு
உன் கரம் பிடித்து நடக்க வேண்டும்
உன் உயிராய் நானிருக்க
என் உணர்வாய் நீயிருக்க
நாம் என்ற நாட்குறிப்பினுள்
நம் நாட்கள் நகர வேண்டும்

எழுதியவர் : பிரிசில்லா (7-Jan-21, 4:37 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 193

மேலே