முத்த இளநீர்

தனிமை பாலை வனத்தில்
நானும்
அவளின் காதல் என்னும்
கானல் நீருக்கு காத்திருக்கிறேன் !!!

அரை மயக்க நிலையில்
நானும் இருக்க
இதழ் முத்தம் என்னும் இளநீர் தந்து
என்னை பிழைக்க வைப்பாளோ !!!
இல்லை
இறுதி மூச்சு அடங்கும் வரை
நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பாளோ !!!!

எழுதியவர் : ஷக்தி (7-Jan-21, 3:03 pm)
சேர்த்தது : ஷக்தி
Tanglish : mutha ilaneer
பார்வை : 126

மேலே