அஸ்வின்

அஸ்வின்... அவன்...
சந்தன நிறத்தில் வாழும்
தூத்துக்குடி முத்து...
அன்போடு பழகுவது
அவனது இனிய சொத்து..

மாறாத நெடிய உயரமும்
அழகிய தோற்றமும்
அஸ்வினின் இயற்பியல் பண்பு...

எல்லோரிடமும்
இனிமையாய்ப் பழகுவது
அவனது வேதியல் பண்பு...

உற்சாகமும் கலகலப்பும்
அவனது உயிரியல் பண்பு...

கல்லூரியில் அஸ்வின்
நடந்து சென்றால்
அத்தனை கண்களும் பார்க்கும்...

மணிரத்னம் இவனைப் பார்த்தால்
பொன்னியின் செல்வனில்
நல்ல வாய்ப்பு கிடைக்கும்...

மின்னணுவியல் கண்ணா...
அன்பு அழகு அறிவின் மன்னா..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பூக்கள்... பூங்கொத்து வழங்கி
புன்னகையோடு வாழ்த்துகிறேன்..
வானமும் வசந்தமும்
வசப்பட மனதார வாழ்த்துகிறேன்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Jan-21, 2:45 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 114

மேலே