பேராசிரியர்
பேராசிரியர் கோமதி...
சத்தமின்றி சாதனை ஒன்றை
செய்து கொண்டே இருக்கிறார்...
சமுதாயத்திற்கு நல்ல பொறியாளர்களைத்
தந்து கொண்டே இருக்கிறார்...
கல்லிடையில் ஆரம்பித்த கல்வி
இவருக்கு இன்னும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது...
கற்றுக்கொண்டே இருக்கிறார்..
கற்பித்துக்கொண்டே இருக்கிறார்...
பாடங்களின் புரிதல்களை
மாணவ மனங்களின் தேடல்களில்
நிரப்பிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்...
படித்துக் கொண்டிருந்த
காலங்களில் வீட்டில் சொல்வது
கல்லூரி சென்று வருகிறேன்...
வேலைக்குச் செல்லும்போதும் சொல்வது
கல்லூரி சென்று வருகிறேன்...
இளையோரோடு இருந்து எப்போதும்
இளைஞராகவே இருக்கும்
நல்ல பணி.. அது ஆசிரியப்பணி..
கோமதி ஒரு சரஸ்வதி...
ஒரு பி.இ... இரண்டு எம்.எஸ்
ஒரு பிஎச்.டி.. இவர் சான்றிதழ்
வாங்கப் படித்தது நிறைய..
சான்றிதழ் வாங்காமல்
படிப்பது இன்னும் நிறைய...
நல்ல பேராசிரியர்களுக்கு
புத்தகங்களைத் தொடாத நாட்கள்
மிகக் குறைவாக இருக்கும்...
புத்தகங்களோடு இருப்பது
மிக நிறைவாக இருக்கும்...
இவர் ஒரு நல்ல பேராசிரியர்...
வானம் உள்ளளவும்
வையகம் உள்ளளவும்
ஆசிரியர்களின் தாக்கம்
இருந்து கொண்டே இருக்கும்...
பூமி சுற்றிக் கொண்டிருக்கும் வரை
அவர்கள் கற்பிக்கும் கல்வி
தலைமுறைகள் கடந்தும்
தொற்றிக் கொண்டே இருக்கும்...
சுறுசுறுப்புத் திலகம்
பேராசிரியர் கோம்ஸ்... இவர்
அறிவு ஆயுதமும்
புரிதல் கேடயமும் கொண்டு
பாட யுத்தங்களில் ஈடுபடும்
எல்லோரையும் ஜெயிக்க வைப்பவர்...
பேராசிரியர் கோம்ஸிடம் படிப்பதற்கு
மாணவர்கள் அத்தனைபேரும்
கொடுத்து வைத்தவர்...
அவருக்கு இது பிறந்த நாள்...
சரஸ்வதி அம்சத்தை வாழ்த்த
நமக்குக் கிடைத்த சிறந்த நாள்...
கற்ற கல்லூரியில்
தரை பார்த்து நடந்தார்...
கற்பிக்கும் கல்லூரிகளில்
ராஜ நடை நடக்கிறார்...
வகுப்புகளில் பாடங்களின்
ராஜாங்கம் நடத்துகிறார்...
தோழி பேராசிரியர்
டாக்டர் கோமதிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வாழ்வது ஒருமுறை... தங்கள்
கல்விப் பணியை
வாழ்த்தட்டும் தலைமுறை...
வசந்தங்கள் வாழ்த்திட
வானமும் வசப்பட
வாழ்க பல்லாண்டு
வளங்கள் பல பெற்று...
👍😀💐🌹🍫🍿🎂👏🚲🌺