மழைக்காதலி

சொட்டு சொட்டாக இறங்கும் மழையை தேநீரை இதமாக தொண்டையில் இறக்கி மழைக்குளிரில் சூடாக சுவைத்தபடி சன்னல் வழியாக மழையை ரசிக்கும் மழைரசிகை அல்ல நான்..
புதிய நதி காலின் அடியில் மழை நீரால் பெருகி மழை நதியாகி ஆர்ப்பரிக்கும் சப்தத்துடன் மழையருவியாகி கொட்டி என் உடலை தழுவும் தண்ணீராகி என் மேல் பொழிந்து என் உடலையும் மனதையும் குளிர்வித்து நான் போடும் குதியாட்டத்தை ரசித்து அதை பதிவு செய்ய மின்னலை அனுப்பி புகைப்படம் எடுக்க சொல்லி ..
இந்த மழையருவியும் மழைநதியும் போதாது என்று மரங்களும்,செடிகளும் திருடி வைத்து கொண்டிருக்கும் மழை நீரை தேடி எடுத்து என் மேல் தெளித்து...
கார்மேகம் கொடுக்கும்
கருணை மழையை கொண்டாடும் மழைக்காதலி நான்...

எழுதியவர் : Harini (16-Jan-21, 8:42 pm)
சேர்த்தது : Harini
பார்வை : 222

மேலே