தடுக்கி விழுந்தவள்

தடுக்கி விழுந்தவள்
😰😰😰😰😰😰😰😰😰😰
பருவத்தில் விளைந்திட்ட நெல்மணியே ,--உன்னை
பதராக போகாமல் படைத்தெடுத்து,
முறையான காலத்தில் குதிர் சேர்த்து ,
முடிவெடுக்கும் நேரத்தை வரையறுத்து,
நாற்றாங்கால் திருமணத்தில்,
நற்பயிரை ஈனாமல்,
அடைமழையின் ஆசைவார்த்தை,
அறிவு மொத்தம் மழுக்கிவிட,
முறையற்ற உறவாளே ,
முளைத்து விட்டாய் தாய் வீட்டில்,
தரங்கெட்ட உன்பிறப்பைத் தாங்காமல் விவசாயி
சேற்றுக்குள் உனை புதைத்து
செஞ்சு முடிப்பான் காரியத்தை
தரங்கெட்ட நெல்மணியே தஞ்சை மண்ணை மறுபடியும்
கறை படுத்த ஒருபோதும்
களஞ்சியத்தில் பிறவாதே......
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

எழுதியவர் : க.செல்வராசு (17-Jan-21, 9:24 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 54

மேலே