விவசாயம் என்னும்
வீண் செயல் எந்நாளும் செய்யாத எம்முள்
வீண் பழிச்சூழுமோ விரயங்கள் ஆகுமோ
விளக்கமதை அறிந்து ஏய்ப்போர் வாழ்வில்
வெண்சாமரம் வீசியே திரவியம் கூடுவதோ
பாடுகள் யாவையாலும் பட்டுடல் சோர்வுற
பன்மணிகள் உழைத்தாலும் உழவில் பயனில்லை
நெல்மணிகள் முதிரும் போதினில் பொழியும்
மழையில் கதிரும் செழித்து மீள முளைக்கும்
கொழித்து வளர வேண்டிய நிலையின் காலத்தில்
பொசுக்கும் கதிரின் ஒளியால் பொசுங்கும்
களையது பயிரில் நிறைந்து முளைத்து
பயிரின் வீரியத்தை குறைத்து உருக்கும்
பூச்சிகளும் புழுக்களும் எலிகளும் சிதைத்து
புத்தம் பயிர்களைக் கெடுக்கும் அதனையழிக்க
தெளிக்கும் மருந்தின் விலைக்கு சேமிப்பு கரையும்
இறுதியாய் கிடைக்கும் விளைச்சலைத் திரட்டி
மண்டியில் விலையிட முயன்றால் அங்கே
மானபங்கம் செய்ய முயல்வோர் பலர் முன்னிலையில்
மாட்டிய இளம்பெண் நிலையில் எம்நிலை இருக்குமே.
------ நன்னாடன்.