மானைத்தருவேன்

மானைத்தருவேன்

நிலைமண்டில ஆசிரியப்பா

கொல்லிம லைமயில் தோகை விரித்தே
நல்ல நாட்டியம் ஆடி வருமடி
உயர்ந்து வளர்ந்த கொம்புத் தேனை தயவாய் கொண்டு வந்துமே யுனக்குநான்
பிழிந்துத் தருவேன் தீஞ்சுவைப் பாரடி
அறுஞ்சுவை கனிகளை பறித்தும் தருவேன்
அறுகால் ஓடையின் நண்டுமீன் காட்டுவேன்
திகில்நிறைக் காட்டில் திரியும் கடுமா
அகிலசந் தனமுயர் பலாமரம் காட்டுவேன்
துணையாய் இருக்க வுனக்கு குட்டிமான்
அணைக்கப் பிடித்துத் தருவேன் வாராய்


.....

எழுதியவர் : பழனிராஜன் (20-Jan-21, 9:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

மேலே