சூழ்ந்தமனிதர் நம்முதிரம்

ஆசிரியத்தாழிசை
கொள்ளையரும் கொடுங்கோலரும்
கோலோச்சும் நிலையிலேயே
கோளபூமியின் கண்டமேழும்
கோட்பாடுகள் எல்லாமும்
கோளவிழியை குருடாக்கி
கோடாங்கியாய் அலையவிட்டு
கொடுமைகளே நிறைத்ததாகவே
கூடுஞ்சபைகள் அனைத்திலும்
குலைநடுங்கிட தீர்மானங்கள்
பாவஞ்சூழ்ந்த மானிடராய்
கோளம்வாழும் யாவருமே
ஞானம்குறைந்த காரணத்தால்
கோளமுழுதும் நம்மில்லம்
சூழ்ந்தமனிதர் நம்முதிரம்
நிகழ்வெதற்கும் நாமேபொறுப்பு
------ நன்னாடன்