பொங்கல் வாழ்த்து
எனக்குள் இருக்கும் என்னை மறந்து, எனக்குள் இல்லா உன்னை நினைந்து; எனக்கு மட்டும் எல்லாம் தா! சோதனை வேண்டாம், உனக்கு எதுக்கு அது இதுவென? எதுவும் வேண்டாம் என, மனிதனுக்குள்தான் எத்தனை எத்தனை குழப்பம்? "முனி"தனக்குள் இருப்பதை உணராவண்ணம், தனி ஒரு மனிதனா விண்ணை வெறித்துப் பார்க்க, பிணி விலக முயற்சி எடுக்க விடில்,வளம் எப்படி நம்மிடம் வந்து சேரும், களம் எப்படி நம் வசமாகும், பலம் எப்படி நம் மனம் வந்து சேரும், நலம் எப்படி நம் உடல் வந்து சேரும், மங்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம், வாங்கும் நிலைக்கு வளர்த்துவிட்டு, எங்கள் வாழ்வுக்கு அடையாளம் தா என இந்த பொங்கல் நாளில் கேட்போம் உறுதியோடு.