என்னவனுக்காக
உன்னை தாண்டி யாரும் இல்லை
உன்னை தவிர எதுவும் தேவை இல்லை
இருந்தும்
என் அருகில் நீ இல்லை
விலகிப் போகும் உன்னை விட்டு விடவும் முடியவில்லை
வலிந்து உன்னை தக்க வைக்கவும் மனமில்லை
விதியென வலிகளை ஏற்றுக் கொண்டு வாழவும் முடியவில்லை
ஆறுதல் தேட அருகில் யாருமில்லை
தோள் சாய்ந்து கண்ணீர் சிந்த பழைய நீ என்னுடன் எனக்காக இல்லை..
கண்ணில் காட்டி கை சேர விடாமல் தட்டி பறித்த இறைவனுக்கே புரியவில்லை நான் வாழ காற்று மட்டும் போதாது என் காதல் நீ வேண்டும் என்று.....
படைத்த அவனுக்கே தெரியாத போது நீ மட்டும் எங்ஙனம் அறிவாய் என் மனதை
மரணத்தை வரமாக கேட்டு நிற்கிறேன் இந்த நொடி
என் மறு ஜென்மத்திலாவது வேண்டும் நீ எனக்கே எனக்காக மட்டும்
என் வரிகளும் வலிகளும் என்றும் உனக்காக மட்டுமே
நான் தொலைத்த பொக்கிஷம்(❤💖💞💗💝💝💘)நீதானே