காதல்

கண்ணும் கண்ணும் கலந்து வந்தது
இன்பமான ஓர் உணர்வு - பின்னர்
அதுவே இருவரையும் சேர்த்து தந்தது
ஓர்உறவு உணர்வே உறவாய் மாறிவர
உடலும் உடலும் உறவாட காமம்
பொங்க பொங்கி அடங்க இருவரும்
முதல் முதலாய் உணர்ந்தனர் அதிசய
ஒருறவு அதுதான் உண்மைக் காதலுறவு
காதல் இப்படி இருவரிடையே பூத்துமலர
காமம் உள்ளடங்கி போனது ...........
வாழைப்பழ தோலையே பலமென்று எண்ணி
உண்டவர் தோலுக்குள் ருசியான
உண்மைப் பழம் கண்டாற்போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jan-21, 7:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 141

மேலே