படித்ததில் பிடித்தது

நாம் ஒரு நாளைக்கு 21600 முறை மூச்சு விடுகிறோம் .

சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பல மேடைக்கு மேல் 21600 பொன் ஓடுகளை நமசிவாய என்ற ஐந்தெழுத்தை அச்சிட்டு கூரையாக வேய்ந்தான் சோழ மன்னன் .

வடலூர் ஞானசபையில் இதனை உணர்த்தும் வகையில் ஞானசபையினை சுற்றி 21600 வளையங்கள் கொண்ட இரும்பு சங்கிலிகளை பொருத்தி உள்ளார்கள் .

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சும் ஒரு மணிநேரத்திற்கு 900 மூச்சும் ஒரு நாளைக்கு 21600 மூச்சும் நம் உடலில் சாதாரணமாக ஓடுகின்றது .

உயிர்மெய்எழுத்துக்கள் 216 என்பது இந்த 21600 மூச்சுகளையே குறிக்கும் .ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21600 மூச்சுக்கு மிகாமல் பயிற்சி செய்தால் அவனுடைய ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகும் .

" விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான் என்று தொடங்கும் திருமந்தித்திர பாடல் இதற்கு சான்று .உட்கார்ந்திருக்கும்போது 12 மூச்சும் நடக்கும்போது 18 மூச்சும் ஓடும் போது 25 மூச்சும் தூங்கும்போது 32 மூச்சும் உடலுறவின் போதும் , சினம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் ஒரு நிமிடத்தில் ஓடுகின்றன .இந்த மூச்சின் அளவு எவ்வளவு அதிகமாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் வாழ்நாளும் குறைகிறது .அதனால் தான் நம்பெருமானார் ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உறங்க பழக்கப்படுத்திக் கொண்டால் அவன் ஆயிரம் வருடங்கள் வாழலாம் என்று கூறுவார் .

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடைய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப்படும் .ஆகையால் உயிர் காற்றை உணர்ந்தவர்கள் , ஓம்காரம் அறிந்தவர்கள் நீண்ட காலம் வாழ்வர் .

அ+ உ +ம =ஓம்

தமிழில் உள்ள உயிர்மெய்ழுத்துக்கள் ௨௧௬ . இது உடலோடு கூடிய உயிர் விடும் மூச்சு கணக்கு . 21600 என்ற எண்ணை அடிப்படையாக அமைந்துள்ளது . இது தமிழ் மொழிக்கே உள்ள சிறப்பு .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (24-Jan-21, 8:40 am)
பார்வை : 245

மேலே