மடையா என்ற சொல்லின் மூலமும் அந்த உண்மையான பொருளும்

மடையா என்ற சொல் நாம் அன்றடம் பயன் படுத்தும் ஒன்று . அந்த சொல்லின் உண்மையான பொருள் பலருக்கு தெரியாது . நாம் அந்த சொல்லையே இன்று வரை தவறான பொருளிலேயே பயன்படுத்தி வருகிறோம் . அந்த சொலின் உணமையான பொருள் என்ன ? அந்த சொல் எப்படி பிறந்தது ?

ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் "மடை" . மடை களை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன . உறுதியான பனைமரங்களை தெரிந்தெடுத்து அதன் உள்தண்டை நீக்கம் செய்து அதனை ஏரியின் அடியாழத்தில் பத்தித்து அதன் உள் ஓட்டையில் கோரை , நாணல் , களிமண் கலந்து அடைத்து விடுவார்கள் .வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்று ஆட்கள் இருப்பார்கள் , உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி செய்யும் சாகசப் பணியாகும் . அந்த நபர் மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்து விடுவார் .மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடை திறந்தவரையும் இழுத்துச் செல்லும் . மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம் , மீண்டவர்கள் குறைவு . இவர்கள் தான் "மடையர்கள் "என அழைக்கப்பட்டனர் .

பிற்காலத்தில் காலப்போக்கில் அறிவற்ற செயல்களை செய்பவர்களை "மடையர்கள்" என்று அழைக்க தொடங்கிவிட்டனர் . மடைமை வேறு , மடையர்கள் வேறு .தமிழ் பெயர்கள் அனைத்தும் ஆழமான வேர் கொண்ட பொருள் பொதிந்த இறவா சொற்கள் . நாம் தான் அவற்றை அவற்றின் பெருமைகளை , இனிமையை , ஆழத்தை அறிய மறந்த , தெரியாத அறிவிலிகளாய் தவறான பொருளில் பயன்படுத்திக்கொண்டுள்ளோம் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (24-Jan-21, 9:08 am)
பார்வை : 86

மேலே