குடியரசு தினம்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்...!!
இது ஆயிரம் காலத்து பயிராக
அவ்வையார் நமக்கு
வழங்கிய பாடல் வரிகள்..!!
இந்த பாடல் ...
எந்த காலத்துக்கும்
எந்த நாட்டின்
ஆட்சியாளர்களுக்கும்
பொருத்தமானது ....!!
அவ்வை பாட்டியின்
பொன்னான வரிகளின்
துணையோடு
உங்கள் அனைவருக்கும்
இனிய "குடியரசு தின"
நல் வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா