கப்டாதாரி
![](https://eluthu.com/images/loading.gif)
திரைப்பட இயக்குநரிடம் உதவி இயக்குநர்:
அய்யா, 'தமிழ்த் தெரியாத பிறமாநில புதுமுக நடிகர் தேவை'னு நாம ஆங்கில நாளிதழ்கள் இந்திய அளவில் கொடுத்த விளம்பரத்துக்கு நல்ல பலன் கெடச்சிருக்கு.
###########
அட, சீக்கிரம் சொல்லுய்யா.
##############
அய்யா மொத்தம் ஐயாயிரம் விண்ணப்பித்திருந்தாங்க. நானும் நம்ம துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர் அந்த விண்ணப்பங்ளைப் பரிசோதனை செஞ்சு அழகானநல்ல உயரமான இருபது பேரைத் தேர்வு செய்தோம். அவுங்கள நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தோம்..அதில் மிகவும் அழகான உயரமான கோடீஸ்வர இளைஞரைத் தேர்ந்தெடுத்தோம். தனக்கு கதாநாயகனா நடிக்க வாய்ப்புக் கொடுத்தா நூறு கோடி செலவில் அவரே தயாரிப்பாளரா இருப்பாராம்.
###########
நல்லது. இந்த மாதிரி ஒரு இளைஞரைத்தான் நான் எதிர்பார்த்தேன். அதிர்ஷ்டம் நம்ம பக்கம். அவரை வரச்சொல்லு. அவுரை சொந்தக் குரலில் பேச வச்சா தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும். சரி அனுப்பி வை.
###########