மகா பாரதத்தில் ஓர் ஊரடங்கு

மகா பாரதத்தில் ஓர் ஊரடங்கு
*******
பாரதப் போர்க் களத்தில் கண்டதோர் ஊரடங்கு
துரோணரைக் கொன்ற கோபம் தனயனை
குரோதமாக்க பஞ்சவரை அழிக்கவே ஏவினான்
நாராயணத்தை! அதற்கோர் மாற்று காணா
நாராயணப் பிரியர்கள் பயந்தே அயர்ந்தனரே
போரெண்ணம் கொண்டாலும் பேராயுதம்
கண்டாலும்
பேராபத்தே யளிக்குமவ் அத்திரத் தத்துவத்தை
பெரியவன் கண்ணனும் பாந்தமாய வர்க்குரை-
க்க
அரியவர் ஐவரும் அறிந்தவர் பலரும்
தரித்தத னைத்தையும் தாமாக கீழிறக்கி
விரிந்த மனத்தோடு தொழுதே கிடந்தாரே
கரிசனங் கொண்ட நாராயண அத்திரமும்
விரைந்தே மறைந்தது எவரையும் சீண்டாது!
பாரதக் களந்தனில் இப்படியோர் ஊரடங்கு!!

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Feb-21, 8:17 am)
பார்வை : 54

மேலே