தமிழ் இனிது

தமிழ் இனிது

இனிதிலும் இனிது
இணையில்லா தாய் மொழி இனிது,
அமிழ்திலும் அமிழ்து
அறிவூட்டும் தமிழ் மொழி அமிழ்து.

அள்ளி பருக பருக
அரிதான அமிர்தமும் நஞ்சாகும்

அறிவு, பெருக பெருக
ஆழ்ந்த பெருங்கடலாய்
தமிழ் அமிர்தமாகும்
அறிவு ஊற்றாகும்
ஆனந்த பெருக்காகும்
தமிழ் எம் செருக்காகும்.

ஒளி ஏற்றம் கொண்ட ஆதவனும்
சான்றோர் சொற்பொழிவு கேட்டு
சாதுவாய் வளம் வந்து
கனிவோடு முகம் காட்டும்,

கதிரின் ஒளி மாற்றம்
கண்டு விட்ட கடலதுவும்
கடலினும் பெரியது
தமிழ்க்கல்வி என்று
பெருத்த கடல் அலையும்
பெருமிதமாய் தலை வணங்கும்.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (2-Feb-21, 8:32 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
Tanglish : thamizh inithu
பார்வை : 1113

மேலே