ஸ்ரீ ஜனகா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீ ஜனகா |
இடம் | : புதுச்சேரி |
பிறந்த தேதி | : 09-Feb-1970 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 280 |
புள்ளி | : 13 |
அலை அலையாய் நுரைகள் நூல் ஆசிரியை
ஒரு கையில் ஓசை உண்டோ
பல கைகள் சேர்ந்தால்
பலத்த ஓசை எழும்.
கூடி வாழ்தல் மனித குலத்துக்கு பெருமை.
சேர்ந்து உழைத்தால்
நாட்டில் செழித்திடும் வளமை.
பண்டம் மாற்றுதலாய்,
கொடுப்பதும் பெறுவதும்
நம் பழமையின் முதிர்ச்சியே.
எத்தனை காலம் வாழ்ந்தோம்
என்பதை காட்டிலும்
எப்படி வாழ்ந்தோம் என்பதே
உள்ளத்தின் சிறப்பு
எண்ணத்தின் உயர்வு.
நம் நாட்டுப் பற்றுதலில்
நலன் கொண்டோர்
சிறை தொட்டு வதைபட்டு
பெற்று தந்த சுதந்திரம்
கயவர் கைப் பிடிக்குள்
சீர் அற்று சிதைவு கொள்ளலாகுமா!
புறப்படு தமிழ் மகனே புறப்படு
சினம் கொண்டு, சீறி எழுந்து
தாய் நாட்டை கைப்பற்றி
தன் கடமையாய் செயலாற்று.
நீருக்குள் நிலவின் வடிவம்
நீர் தெளிவில் நிழற் தோற்றம்.
மெய்யும், பொய்யும் அறியா வண்ணம்
மேல் நோக்கி ததும்பும் நுரையாய்,
மனம் மகிழ்வு கொள்ளும்.
கல் ஒன்றை எரிந்து விட
கலங்கி விடும் நீர் குழம்பி
உருகொண்ட நிழலுருவம்
உருமாறி மறைவு கொள்ளும்.
உழைப்பு இன்றி வந்த செல்வம்
உருகுளையும் நிழலுக்கு ஒப்பாய்.
சிந்தும் வியர்வையால் உடல் வருத்தி
சிறு தொகை என்றாலும் பெயர் உரைத்து,
உழைப்பால் உயர்வு தொடு
உண்மையையே நாவில் இடு.
உருமாறும் நிலவு விண்ணில்
உருகுலையும் நாள் ஒன்றில் தேய்பிறையாய்.
காலம் தொட்டு முகம் மலரும்,
முழுமதியாய் பொலிவு பெற்று.
நிஜமும், நிழலும் நிலைமாறும் காட்சி
நிலை காணும் இரு கண்ணில்
பாரதி கண்ட தமிழ்ப் பெண்ணே
பதுமையாய் வாழ்ந்தது போதுமென்று
புதுமையைத் தேடி புறப்பட்ட பெண்ணே.
ஏணிப்படியாய்
எத்தனை தடைகள்.
விழுந்த போதும்
வீழ்ச்சி கொள்ளாது
தொடர்ந்து சென்று
தொடுவானம் கண்டாய்
விழித்துக் கொண்டாய்
விதியை வென்றாய்
பட்டம் பயின்றாய்
சட்டத்தை ஆண்டாய்
ஆணுக்கு நிகராய்
ஆற்றல் திறன் பெற்று
வானில் பிறை நிலவாய்
நித்தம் நீ மெலிந்த போதும்
முயற்சி திருவினையால்
முழு நிலவாய், முழுமை பெற்று
மண்ணில் தடம் பதித்து
மக்களில் ஒருவராய்
விண்ணில் தடம் பதித்தாய்
வீரத்திருமகளாய்.
பாரதி கண்ட தமிழ்ப் பெண்ணே
பார் எங்கும் உன் புகழ் ஒளிரட்டும்
சாணம் தட்டுவதே தன் வாழ்வில்
சாத்தியமென்று மாதர் பலர்
இருள் நிலவாய் இனிமை காணாது
முழுநிலவாய் முழுமை பெறாது
பாட்டி நிலவில் வடை சுட்ட கதை கேட்டு
பக்குவம் அறியாச் சிறு பிள்ளைத் தனமாய்,
விண்ணில் உதித்த நிலவை கண்டு
வியந்த காலம் உண்டு.
அடுப்படியே அடைக்கலமாய்
அன்று ஓர் காலம் பெண்கள்.
ஆட்சி காலம் மாற்றம் காண
ஆணுக்கு பெண் நிகர் என்று
வீட்டை கடந்து விடை பெற்றது
விண் வெளியை அடைவதற்கோ!
உச்சத்தில் கண்ட நிலவினை
உரசிவிட்டு வர துணிந்தார்
விண்ணில் அடியெடுத்து வைத்த
வீராங்கனை சுனித்தா வில்லியம்ஸ்.
துணிந்து செயல்பட்டால் எச்செயலும்
துச்சமே என்பதற்கு இலக்காய்
வழிகாட்டிய சகோதரி
நம் வாழ்விற்கு பாடமாய்.
விண்ணில் பாடசாலை தொடரும் இரவு
எண்ணில் ஓர் கற்பனை மலரும் நினைவு.
பரந்த வானில் பள்ளி சாலை அமைத்து,
பாடம் பயிலவரும் நட்சத்திர மணிகளை நிறைத்து,
பாடம் உரையாற்றும் ஆசிரியை
பவனிவரும் நிலவு.
கடலினும் பெரிது
கல்வியை கற்பது அரிதென
நட்சத்திர மழலை கூட்டம்
நாளும் கற்றது வானில்.
பருவகால மழைக்கு
மேகத்தின் அழைப்பு;
பள்ளி இறுதி ஆண்டு
விண்ணில் விடுப்பு.
கூடி பழகி சிறகடித்த நட்பு
திசைக்கு ஒன்றாக பிரிந்து
வருத்தமாய் மழையை கோபித்து
வானில் மறைந்தது நட்சத்திரங்கள்;
நட்பின் ஆழம்
ஆழ்கடலின் தூரம்
என்பதை உரைத்து.
- ஸ்ரீ ஜனகா
ஓர் பிள்ளையின் முன்னேற்றம்
அன்னையின் அங்கீகாரம்
அடையாளம் சொல்லும்.
வளரும் பிள்ளையோ
படரும் கொடிபோல்;
அன்பு என்னும் கொம்பில் சுற்றி,
அறிவு என்னும் வழியில் படரச் செய்தல்
அன்னைக்கே உரிதான ஒன்றாய்
அறநெறியின் சிறப்பு.
இல்லையேல்
வழிமாரும் கொடியாய்,
வந்து கூடும் மேகங்களாய்,
நிலை மாறி கலைந்து விட
தடுமாறும் நிலை காணும்
பின் வரும் செயலினை கண்டு
பிழையாய் ஐயம் கொள்ளும்.
- ஸ்ரீ ஜனகா.
விவசாய நிலமெல்லாம்
வீடு மனையாய் விரயமாக
விளைச்சல் எல்லாம் தடைப்பட்டு
விலைவாசி உயர்வாக;
கூடை நிரம்பாது செலவு,
குன்றாய் வளருது விலைவாசி உயர்வு.
காந்தி சிரிக்கும் நோட்டை மீறும் விலை ஏற்றமே,
காசு கைமாறி போனதும் தடுமாற்றமே.
வாங்கும் பொருளோ தேவைக்கு வேண்டி
வைத்து செல்ல மனமின்றி தன்னுடன் கொள்ள
அடுத்து அடுத்து வரும் கடைதானே
ஐந்து ரூபாய் பாக்கி என்று சொல்ல
நாளுக்கு நாள் கூடுதலாகும் கணக்கு
நாளை நடுத்தெருவில் கொண்டு விடும் வழக்கு.
ஐந்தும் பத்தும் ஆக்கம் காண
ஆயிரம் நிறைந்ததும் தொகையை காண;
இனிதாய் பேசும் வியாபார தந்திரம்
இகழ்ந்து பேசிட உந்தன் மனம் விம்மிடும்.
சிக்கன வாழ்வினை வழக்கமாய் கொள்ளு
சீ
தமிழ் இனிது
இனிதிலும் இனிது
இணையில்லா தாய் மொழி இனிது,
அமிழ்திலும் அமிழ்து
அறிவூட்டும் தமிழ் மொழி அமிழ்து.
அள்ளி பருக பருக
அரிதான அமிர்தமும் நஞ்சாகும்
அறிவு, பெருக பெருக
ஆழ்ந்த பெருங்கடலாய்
தமிழ் அமிர்தமாகும்
அறிவு ஊற்றாகும்
ஆனந்த பெருக்காகும்
தமிழ் எம் செருக்காகும்.
ஒளி ஏற்றம் கொண்ட ஆதவனும்
சான்றோர் சொற்பொழிவு கேட்டு
சாதுவாய் வளம் வந்து
கனிவோடு முகம் காட்டும்,
கதிரின் ஒளி மாற்றம்
கண்டு விட்ட கடலதுவும்
கடலினும் பெரியது
தமிழ்க்கல்வி என்று
பெருத்த கடல் அலையும்
பெருமிதமாய் தலை வணங்கும்.