உழைப்பால்

நீருக்குள் நிலவின் வடிவம்
நீர் தெளிவில் நிழற் தோற்றம்.

மெய்யும், பொய்யும் அறியா வண்ணம்
மேல் நோக்கி ததும்பும் நுரையாய்,
மனம் மகிழ்வு கொள்ளும்.

கல் ஒன்றை எரிந்து விட
கலங்கி விடும் நீர் குழம்பி
உருகொண்ட நிழலுருவம்
உருமாறி மறைவு கொள்ளும்.

உழைப்பு இன்றி வந்த செல்வம்
உருகுளையும் நிழலுக்கு ஒப்பாய்.

சிந்தும் வியர்வையால் உடல் வருத்தி
சிறு தொகை என்றாலும் பெயர் உரைத்து,
உழைப்பால் உயர்வு தொடு
உண்மையையே நாவில் இடு.

உருமாறும் நிலவு விண்ணில்
உருகுலையும் நாள் ஒன்றில் தேய்பிறையாய்.

காலம் தொட்டு முகம் மலரும்,
முழுமதியாய் பொலிவு பெற்று.

நிஜமும், நிழலும் நிலைமாறும் காட்சி
நிலை காணும் இரு கண்ணில்
ஓர் பார்வையே சாட்சி.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (20-Mar-21, 4:10 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
Tanglish : ulaippaal
பார்வை : 61

மேலே