இரண்டு கைகள்

இரண்டாயிரம் வேலைகளைச் செய்ய முயலும்
இரண்டு கைகள்
அதிகாலை ஓட்டமொன்றில்.
மூச்சுப் பிடித்து
மூன்று பேர்
வேலைதனைச் செய்யும் போது
பிரணாயாமமும் சற்று
திணறித் தான் போகிறது
என்னிடம்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (20-Mar-21, 3:23 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : irandu kaikal
பார்வை : 81

மேலே