நட்பின் ஆழம்
விண்ணில் பாடசாலை தொடரும் இரவு
எண்ணில் ஓர் கற்பனை மலரும் நினைவு.
பரந்த வானில் பள்ளி சாலை அமைத்து,
பாடம் பயிலவரும் நட்சத்திர மணிகளை நிறைத்து,
பாடம் உரையாற்றும் ஆசிரியை
பவனிவரும் நிலவு.
கடலினும் பெரிது
கல்வியை கற்பது அரிதென
நட்சத்திர மழலை கூட்டம்
நாளும் கற்றது வானில்.
பருவகால மழைக்கு
மேகத்தின் அழைப்பு;
பள்ளி இறுதி ஆண்டு
விண்ணில் விடுப்பு.
கூடி பழகி சிறகடித்த நட்பு
திசைக்கு ஒன்றாக பிரிந்து
வருத்தமாய் மழையை கோபித்து
வானில் மறைந்தது நட்சத்திரங்கள்;
நட்பின் ஆழம்
ஆழ்கடலின் தூரம்
என்பதை உரைத்து.
- ஸ்ரீ ஜனகா