விண்ணின் வீராங்கனை

சாணம் தட்டுவதே தன் வாழ்வில்
சாத்தியமென்று மாதர் பலர்

இருள் நிலவாய் இனிமை காணாது
முழுநிலவாய் முழுமை பெறாது

பாட்டி நிலவில் வடை சுட்ட கதை கேட்டு
பக்குவம் அறியாச் சிறு பிள்ளைத் தனமாய்,
விண்ணில் உதித்த நிலவை கண்டு
வியந்த காலம் உண்டு.

அடுப்படியே அடைக்கலமாய்
அன்று ஓர் காலம் பெண்கள்.

ஆட்சி காலம் மாற்றம் காண
ஆணுக்கு பெண் நிகர் என்று
வீட்டை கடந்து விடை பெற்றது
விண் வெளியை அடைவதற்கோ!

உச்சத்தில் கண்ட நிலவினை
உரசிவிட்டு வர துணிந்தார்
விண்ணில் அடியெடுத்து வைத்த
வீராங்கனை சுனித்தா வில்லியம்ஸ்.

துணிந்து செயல்பட்டால் எச்செயலும்
துச்சமே என்பதற்கு இலக்காய்
வழிகாட்டிய சகோதரி
நம் வாழ்விற்கு பாடமாய்.

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (9-Mar-21, 4:22 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
பார்வை : 828

மேலே