பரிமாறுதலும் ஆகச்சிறந்த

பரிமாறுதலும் ஆகச்சிறந்த எழிலான கலையாகும்
உணவாகினும் உணர்வாகினும் பிணக்காயினும்
காலமறிந்து பகிரும்போது நிலைத்தாளும் இக்கலை
கடமைக்கென்று செய்யும் போது எரிச்சலூட்டுமே
வேண்டும் போதும் கேட்கும் போதும் பகிர்ந்தால்
வேண்டுவோருக்கும் கேட்போருக்கும் நலந்தரும்
பரிமாறுவோரிடம் காரணமின்றி பலமுறைக் கேட்டால்
பலவகையில் பிணக்கையாக்கி பரிதவிக்க விடுமே
உயிர்களின் பால் அன்பு கொண்டவர்கள் உள்ளத்தில்
உதிரம் போல் பிணைந்து இணைந்திருக்கும் இக்கலை
மகிமைக் கொண்ட மனிடருள் இயற்கையாகவே
தோன்றி மரணம் வரை மகிழ்ச்சியுடன் இருக்கும் கலை
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Mar-21, 6:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே