கதிரும் வியர்த்து - இணைக்குறள் ஆசிரியப்பா

சிவனே நீயோ ஆடலில் வல்லவனோ
அறிந்திலேன் நானும் இதுவரை
நீங்கள் ஆடிய ஊர்த்தாண்டவம்
உலகம் அதிரவே ஆடினீராம்
கதிரும் வியர்த்து பார்த்ததாம்
புலவர் பலரும் பாடினரே
நெருப்பும் கண்களில் எரியவே
நீரும் அந்தரத்தில் நின்றதாம்
காற்றும் கட்டுப்பட நடனமும்
களிப்பில் பலவகை நிகழ்த்திய
கயிலாயம் என்னுமிடம் களமாம்
தாளம் பாவம் அலங்காரம்
தரித்த உன்னை யார்கண்டார்
கனத்த கால்களில் மணியும்
செழித்த தோள்களில் அரவமும்
புனைந்து நீர்நடன மிட்டது உண்மையோ.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Mar-21, 6:46 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே