சிக்கனம்

விவசாய நிலமெல்லாம்
வீடு மனையாய் விரயமாக
விளைச்சல் எல்லாம் தடைப்பட்டு
விலைவாசி உயர்வாக;

கூடை நிரம்பாது செலவு,
குன்றாய் வளருது விலைவாசி உயர்வு.

காந்தி சிரிக்கும் நோட்டை மீறும் விலை ஏற்றமே,
காசு கைமாறி போனதும் தடுமாற்றமே.

வாங்கும் பொருளோ தேவைக்கு வேண்டி
வைத்து செல்ல மனமின்றி தன்னுடன் கொள்ள
அடுத்து அடுத்து வரும் கடைதானே
ஐந்து ரூபாய் பாக்கி என்று சொல்ல
நாளுக்கு நாள் கூடுதலாகும் கணக்கு
நாளை நடுத்தெருவில் கொண்டு விடும் வழக்கு.

ஐந்தும் பத்தும் ஆக்கம் காண
ஆயிரம் நிறைந்ததும் தொகையை காண;

இனிதாய் பேசும் வியாபார தந்திரம்
இகழ்ந்து பேசிட உந்தன் மனம் விம்மிடும்.

சிக்கன வாழ்வினை வழக்கமாய் கொள்ளு
சீரான வாழ்வு தரும் கண்ணாக எண்ணு.

- ஸ்ரீ ஜனகா

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (7-Feb-21, 11:00 pm)
Tanglish : chikkanam
பார்வை : 151

மேலே