ஆபாசம்

♥️♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️♥️

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️

"ஆறறிவு" படைத்தவன்
ஒட்டிய
"ஆபாச
சினிமா போஸ்டரை"
கிழித்தது
"ஐந்தறிவு" படைத்த கழுதை....!

♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️♣️

காலையில்
கரும்பாய் இருந்தவளை
வீட்டு வேலைகளும்
குழந்தைகளும்
பேருந்து நெரிசல்களும்
அலுவலக வேலைகலும்
கடித்துத் துப்பியதில்
இரவில்
சக்கையாய்
படுக்கையில் விழுந்தாள்....
விழுந்தள் மீது
எறும்பாய் ஊரினான்
கணவன்......!

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

பாக்கெட்டில் இருக்கும்
பணத்தை வேண்டுமானால் தண்ணீரைப் போல்
செய்யுங்கள் ...
ஆனால்
பக்கெட்டில் இருக்கும்
தண்ணீரை
பணத்தை போல்
செய்யுங்கள்.....!

♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️♠️

அந்தப் பெண்
அணிந்திருந்த ஆடை
இந்த ஆணின் மனதை நிர்வாணமாக்கியது....!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

தேர்தல்
வரும்போதெல்லாம்
அவன்
அடகு வைக்கிறான்
"வாக்குரிமையை"

*கவிதை ரசிகன்*

♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️♥️♠️

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Feb-21, 7:22 pm)
Tanglish : aabaasam
பார்வை : 52

மேலே