ஆகாயத்தில் விமானம் ஓட்டலாம்
அரிசிக் கஞ்சி குடித்தால் அறுப்பு அறுக்கலாம்
கோதுமைக் கஞ்சி குடித்தால் குளிர் தாங்கலாம்
ஓட்ஸ் கஞ்சி குடித்தால் ஒட்டகமாய் ஓடலாம்
ஜீராக் கஞ்சி குடித்தால் காய்ச்சல் நோயை விரட்டலாம்
செவ்வரிசிக் கஞ்சி குடித்தால் நாளெல்லாம் பசியாமல் இருக்கலாம்
ஆறிய கஞ்சி பழங் கஞ்சி அருந்தினால்
ஆலமரத்தடியில் அசந்து கண்ணுறங்கலாம்
அஞ்சாத துணிச்சலை நெஞ்சில் ஏந்தி நின்றால் எந்தக் கஞ்சி குடித்தாலும்
ஆணோ பெண்ணோ ஆகாயத்தில் விமானம் ஓட்டலாம் !