மன்னனா மந்திரியா
மன்னனா மந்திரியா
நேரிசை வெண்பா
மன்னர் வழிசெல்லான் மண்ணில் தலைசாயும்
அன்றை நடைமுறை கண்டறி -- இன்றரிய
நன்மந்தி ரிக்குமேது போற்றல் தலைவீழா
இன்றை நிலையா மறி
அன்றைய மன்னர் காலத்தில் அவன் சொல் கேளாதோர் தலை
மண்ணில்சாயும். இன்று நல்ல மந்திரிகளை பார்ப்பது துர்லபம்
அப்படியும் சில நல்ல மந்திரிகள் செய்யும் நமையையும் வீணேத்
தூற்று கிறார்கள். காரணம் இன்று என்ன செய்தாலும் தலையை
சாய்க்க முடியா என்பதே.
...........