பாரதியின் தமிழ் பெண்ணே

பாரதி கண்ட தமிழ்ப் பெண்ணே
பதுமையாய் வாழ்ந்தது போதுமென்று
புதுமையைத் தேடி புறப்பட்ட பெண்ணே.

ஏணிப்படியாய்
எத்தனை தடைகள்.

விழுந்த போதும்
வீழ்ச்சி கொள்ளாது

தொடர்ந்து சென்று
தொடுவானம் கண்டாய்

விழித்துக் கொண்டாய்
விதியை வென்றாய்

பட்டம் பயின்றாய்
சட்டத்தை ஆண்டாய்

ஆணுக்கு நிகராய்
ஆற்றல் திறன் பெற்று

வானில் பிறை நிலவாய்
நித்தம் நீ மெலிந்த போதும்
முயற்சி திருவினையால்
முழு நிலவாய், முழுமை பெற்று

மண்ணில் தடம் பதித்து
மக்களில் ஒருவராய்
விண்ணில் தடம் பதித்தாய்
வீரத்திருமகளாய்.

பாரதி கண்ட தமிழ்ப் பெண்ணே
பார் எங்கும் உன் புகழ் ஒளிரட்டும்

எழுதியவர் : ஸ்ரீ ஜனகா (9-Mar-21, 4:33 pm)
சேர்த்தது : ஸ்ரீ ஜனகா
பார்வை : 2666

மேலே