அரசமரத்தடியில்
ஊர்தோரும் கூவும் ஒலிப்பெருக்கிகள்
கும்மாள மனங்கொண்ட வேட்பாளர்கள்
பற்பல வண்ணத்தில் கட்சிக்கொடிகள்
ஆரத்தித் தட்டுகளுடன் ஆவலோடு பெண்கள்
உளறலோடு வாக்கு கேட்கும் தலைவர்கள்
உற்சாக பாணத்தை உண்ட தொண்டர்கள்
விளங்கிக் கொள்ளாத தெரு நாய்கள் பயத்துடன்
கூட்டத்தால் மிரண்டபடி செல்லும் மாடுகள்
கைபேசியுடனே உள்ள பள்ளிக் குழந்தைகள்
முடியாததை சொல்லும் சுவர் விளம்பரங்கள்
பல நிறுவன இயந்திர வாகனங்கள் சாரையாய்
பகலிலும் எரிந்தபடியுள்ள தெரு மின் விளக்குகள்
நியாய விலைக்கடையில் வாங்க வந்த பெருங்கூட்டம்
அரசமரத்தடியில் பொழுதைப் போக்கும் சிறு கூட்டம்
எட்டிப்பார்க்கும் இரவு ஆடை உடுத்திய மகளிர் கூட்டம்
எதையும் காதில் வாங்காத மனம் பிறழ்ந்தோர்
இதையெல்லாம் சரி செய்வார்களாம் அரசியலர்கள்
அவர்கள் ஆட்சியேற்க நாம் வரிசையில் நிற்கணும்
ஆட்சியமைத்தவுடன் அத்தனையும் காற்றிலே
சொல்லுவதை செய்வோர் பொறுப்புக்கு வருவார்களா?
-------- நன்னாடன்