ஏதேதோ எதற்கோ

தேடிட தேடிட கிடைத்திடும் தேடல்
நாடிட நாடிட கிடைத்திடும் விளக்கம்
ஆடிடும் கலையும் மருந்தே

பாடிட பாடிட குரலும் வளமாகும்
ஓடிட ஓடிட உடலும் வலுவாகும்
பாடிடும் கலையும் மருந்தே

வடித்த சோற்றை உண்பதும் சிறப்பு
கடித்து காய்களை திண்பதும் நன்று
புசிக்கும் எதுவும் மருந்தே.

படித்திட படித்திட அறிவு தெளிவாகும்
கொடுத்திட கொடுத்திட கொடையும் வளர்ந்திடும்
கிடைக்கும் வாய்ப்பு அரிது.

எடுப்பதில் இருக்கும் வேகத்தின் தன்மை
கொடுப்பதில் இருந்தால் எப்போதும் நமக்கு
படிபடியாய் கூடிடும் மகிழ்வு
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Apr-21, 10:55 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ethetho etharko
பார்வை : 43

மேலே