நுண்ணறிவு கொடுக்கும் நூலகம்

அறிவின் குவியல்கள் ஆற்றலுடன் இங்கே
தேர்ந்தெடுத்து படித்தால் தெளிதல் பெறலாம்
அறிஞர் இல்லாதோரின் ஆற்றல் படைப்புகளும்
அறிந்து எழுதியோரின் ஏற்றமிகு படைப்புகளும்
அணுவின் நிலைக்குறித்த நுணுக்க குறிப்புகளும்
பெரிதினும் பெரிதான பிரமாண்ட நூல்களும்
கருவின் நிலை விளக்கும் சிறந்த நூல்களும்
உயிரின் இரக்கம் சொல்லும் சிறப்பு நூல்களும்
மனிதன் மனநிலையை விளக்கும் படைப்புகளும்
மதத்தை பற்றிய பதைபதைப்பு படைப்புகளும்
இலக்கிய இலக்கணம் பற்றி இயம்புகிற நூல்களும்
ஐம்பூதத்தின் நிலை விளக்கும் அபூர்வ நூல்களும்
அறிஞர் கவிஞர் புலவர் அரசர் நிலை நூல்களும்
கற்காலம் முதல் தற்கால வரையிலான யாவையையும்
தேடுகின்ற யாவருக்கும் தெளிவை கொடுக்குமிடம்
அமைதியான இடமெனினும் அணு உலைக்கு இணையானதே.
-----நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-May-21, 2:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 1160

மேலே