தைப்பூசம்
தைப்பூசம்
அருள் வழங்கும் அழகிய முகம் போற்றி
ஆறுதல் அளிக்கும் அபய கரம் போற்றி
இன்னல் அழித்து இன்பம் அளிக்கும் இறை போற்றி
ஈசனுக்கும் ஆசான் ஆனாய் நின் தாழ் போற்றி
உருகி அழைப்போரைக் காப்பாய் போற்றி
ஊழ்வினையை வேரோடு அழிப்பாய் போற்றி
எங்கும் நிறை பரம்பொருளின் மைந்தா போற்றி
ஏழை எளியோரின் கருத்தில் நிறைந்தாய் போற்றி
ஐம்புலனையும் அடக்கிய ஆண்டியே போற்றி
ஒருமுகத்தினில் ஆறுமுகத்தையும் காட்டினாய் போற்றி
ஓம்கார பொருளின் விளக்கம் உரைத்தாய் போற்றி
ஒளவைக்கு அருளிய ஐங்கரன் தம்பியே போற்றி
தைப்பூச நன் நாளினிலே காவடி எடுத்து
கந்தனை கண்டு கரம் கூப்பி வணங்குவோம்