கலாச்சாரம்

கலாச்சாரம்
கலிவிருத்தம் ( கட்டளை )

மிலேச்சர்நம் வீரத் தமிழர்க லாச்சா ரமதுகொன்று
மிலேச்சர்தம் சொந்தக் கலாச்சார மிங்கு பரப்பலுமேன்
கிலேசங்கொள் ளாதத் தமிழாநீ வீணா யதைப்புகழ்ந்து
பலேயென்று பாராட் டலைவிட்டு தூர வதைத்துரத்தே

அயலான் நம்மீது படைகொண்டுதாக்கி நாட்டைப் பிடித்து மக்களை
மதம் மாற்றி அவரது கலாச்சாரம் பரப்புகின்றான். நமது மக்கள்
வெள்ளந்தியாய் அதில்சேர்ந்து அவன்கலாச்சரம் பின்பற்றி
நமது கலாச்சாரத்தை அயலானுடன் சேர்ந்து எள்ளுகிறான்.
அவர் கலாச்சாரத்தை உதறித்தள்ளு தூரமே.


.............

எழுதியவர் : பழனிராஜம் (8-Feb-21, 9:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1281

மேலே