பழந்தமிழர் குணம்

பழந்தமிழர் குணம்
இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

என்ன வினையை யிவரிங்குக் கற்றாரோ
இன்றும் புரியவில்லை தெள்ளுத் தமிழையிங்கு
நன்றாய் படித்துப் பயன்பெற யாருளர்சொல்
தொன்மை பழக்கம் தொட தயக்கமேனாம்
இன்னல் மறக்க சிவனைத் தொழுதிடுவாய்
கன்னல் முருகாம் கடவுள் வணங்கிடுவாய்
தின்றுக் கொழுத்தவன் பேச்சினை நம்பாதே
பொன்றாம்நீ சைவம் துறக்க வீழ்வாயே





......

எழுதியவர் : பழனிராஜன் (8-Feb-21, 12:04 pm)
பார்வை : 423

மேலே