என் மனதில் நின்ற காதலியே 555

***என் மனதில் நின்ற காதலியே 555 ***


நினைவானவளே...


தினம் ஆயிரம்பேர் கடந்து
செல்லும் சாலையில்...

ஆயிரத்தில் ஒருத்தியாய்
உன்னை கண்டேன்...

நொடியில் எப்படி என் உள்ளம்
கொள்ளை கொண்டாய்...

உன்னை பின் தொடர நேரம்
போதவில்லை எனக்கு...

நாட்கள் சில கடந்து மீண்டும்
உன்னை கண்டேன்...

அன்று சுடிதாரில் இன்று
பட்டு புடவையில்...

கூந்தலில் சிறுமல்லியும்
அதனருகே ஒற்றை ரோஜாவும்...

நீ செல்லும் விலாசம்
அறிய உன்னை தொடர்ந்தேன்...

சாலையில் வழிமறித்த உன் தோழி
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல...

நானும்
சொல்லி கொண்டேன்...

பெயரே தெரியாத உனக்கு
என் மனதுக்குள் வாழ்த்துக்கள்...

உன்னை முழுவதும்
தெரிந்துகொள்ள...

உன்னை தொடரவா
உன் தோழியை தொடரவா...

செயல்படுமுன்னே வெவ்வேறு
திசையில் நீங்கள் இருவரும்...

கூட்ட
நெரிசலில் மறைந்தீர்கள்...

உன்னை காண காத்திருந்த
நாளில் தெரிந்து கொண்டேன்...

நீ வந்து செல்லும் பேருந்தின்
வழிதடம் மாறிவிட்டதால்...

உன்னை காணாமல்
ஏங்கி தவித்தேன்...

என் காதலோடு கடற்கரையில்
நான் நடைபோட...

உன் காதலை
கண்டுகொண்டு வந்தேன்...

இன்னொருவரின் கைக்குள் உன்
கைவிரல்கள் இருப்பதை கண்டு...

சாலையோர பூக்களாய்
என்னில் நீ பூத்தாய்...

மனதில் நின்ற
என் காதலியே.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (10-Feb-21, 9:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 587

மேலே