காதல் பிரிவு

மௌனிக்காதே உன் மௌனங்கள் எழுதுகிறது என் மரணத்தை..
நீ இல்லா தனிமை என்னை ஆக்கியது தண்டனை கைதியாக..
அடிக்கடி அநாதை ஆகிறேன் நீ என்னை அகன்று சென்றதால்..
உன்னில் தொலைந்து நான் தொலைவாகிவிட்டேன் என்மனதிலிருந்து..
நாம் காதல் எழுதிய என் வீட்டுச்சுவர் விடாமல் வீழ்த்துகிறது உன்னில்..
என் கண்ணீர் துளிகள் தினமும் எழுதுகிறது உன் பெயரை என் தலையணையில்..
தாய் மடி தேடும் குழந்தையாய் என் மனம் தேடுகிறது உன்னை..
வார்த்தைகளால் வதைத்தாலும் சரி என்னிடம் பேசிவிடு..
என்னை காண வேண்டாம் காட்சியளித்துவிடு கனத்த என் இதயம் கரைய..
பிரிவும் பரிகாசம் செய்கிறது பிரிவினை மட்டுமே என்றும் துணையாய் கொண்டதால்..
தூரங்கள் துயர் அளித்தாலும் கண்கள் கண்ணீரால் சிறைபட்டாலும் இன்பத்தை இதமாய் பாய்ச்சியது உன் நினைவுகள்..
நீ என்பதை நாமாக்க உனக்காக காத்திருக்கும் உந்தன் நான்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (19-Feb-21, 5:30 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : kaadhal pirivu
பார்வை : 515

மேலே