காதல் வரமா
வாழ்வின் தேடலில்
இறைவனின் கொடை!
தன்னலமில்லா அன்பே காதல் !
மற்றோர் உயிரினை தனதாக உணர்த்துவதே காதல் !
உள்ளத்தின் அன்பை மௌனத்தில் உணர்த்துவதே காதல் !
மௌனத்தின் ஒலியை மொழியாக்கும் தந்திரம் காதல் !
இயற்கையின் மொழிகளில் வலிமையானது காதல் !
அனைத்து உயிர்க்கும் பொதுவானது காதல் !
தன்னை மறந்தாலும் தன் நிலை தவறாததே உண்மை காதல் !!